கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்... தலைகீழாக நின்று அகோரிகள் சிறப்பு பூஜை..!

கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டும் என்று நேற்று அதிகாலை வரமிளகாய் யாகம் நடத்தப்பட்டது. நள்ளிரவில் உலக நன்மைக்காக நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு தலைகீழாக நின்று மந்திரங்கள் ஜெபித்தனர்.

coronavirus agorigal special pooja

கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டும் என்று நேற்று அதிகாலையில் அகோரிகள் சிறப்பு பூஜை செய்து யாகம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் காசியில் பயிற்சி பெற்றபின் அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து அதற்கு தினமும் பூஜைகள் செய்து வருகிறார். இந்த அகோரிகாளி  கோயிலில் விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற ஆரம்பித்தது.

coronavirus agorigal special pooja

இந்நிலையில், கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் நல்வாழ்வு பெற வேண்டும் என்று நேற்று அதிகாலை வரமிளகாய் யாகம் நடத்தப்பட்டது. நள்ளிரவில் உலக நன்மைக்காக நடத்தப்பட்ட சிறப்பு யாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு தலைகீழாக நின்று மந்திரங்கள் ஜெபித்தனர்.

coronavirus agorigal special pooja

அப்போது, அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதப்பட்டு வரமிளகாய், நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு பூஜை செய்தார். யாகத்தின் போது சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவ் என முழக்கமிட்டனர். முன்னதாகவே அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஜெய் அகோரிகாளி சிலை முன்பு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios