ஆன்லைன் ரம்மியால் பணம் இழப்பு.. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவன்..!

மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் சந்தோஷ்(23) என்ற கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

College student commits suicide by jumping in front of train over online rummy

மணப்பாறை அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த விரக்தியில் சந்தோஷ்(23) என்ற கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இளைஞர் சந்தோஷ் (23). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் சந்தோஷ் அதிகளவில் பணத்தை இழந்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க;- தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடான ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு! மகிழ்ச்சியில் ராமதாஸ்! கையோடு முதல்வருக்கு கோரிக்கை

College student commits suicide by jumping in front of train over online rummy

தான் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு எடுத்தததை அடுத்து சந்தோஷ் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்துள்ளார்.

College student commits suicide by jumping in front of train over online rummy

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- ஆன்லைன் ரம்மிக்கு தடை போட்ட முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிப்பாரா ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios