விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச படம் விவகாரம்... லிஸ்ட்டில் சிக்கும் மருத்துவர்கள், தொழிலதிபர்கள்... அலேக்கா தூக்க போலீஸ் தீவிரம்..!
குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குழந்தையின் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குழந்தையின் வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம்பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும் புள்ளி விவரங்கள் வெளியாகின. இணையதளம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதும், பதிவிறக்கம் செய்து அதை பலருக்கு அனுப்புவதும் சட்டப்படி குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, ஏடிஜிபி ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியை சோ்ந்த கிறிஸ்டோபா் அல்போன்ஸ் ராஜ், என்பவா் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி, காஜாபேட் தெருவில் வசிக்கும் கிறிஸ்டோபா், ஐடிஐ ஏசி மெக்கானிக் படித்து, நாகர்கோவிலில் பணியாற்றி வந்துள்ளார்.’நிலவன் நிலவன்’’ஆதவன் ஆதவன்’ உள்ளிட்ட பெயா்களில் போலி பேஸ்புக் கணக்கில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஆபாச படங்களை பதிவேற்றியுள்ளார். மேலும், பேஸ்புக் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கிறிஸ்டோபரின் பேஸ்புக் கணக்கில் பாலோயர்களாக 300 பேர் இருந்துள்ளனர். அவர்களுக்கு கிறிஸ்டோபர் ஆபாச படங்களை அனுப்பி இருப்பதால் அந்த 300 பேரின் முகவரியையும் தனிப்படை போலீசார் சேகரித்து உள்ளனர். இதனிடையே திருச்சியை சேர்ந்த 100 பேரில் 15 பேர், கிறிஸ்டோபர் அனுப்பிய படங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளதால் அவர்களின் முழு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து முதற்கட்டமாக இந்த 15 பேரையும் ஓரிரு நாளில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.