பள்ளி கழிவறையில் பிறந்த குழந்தையின் சடலம்… திருவெறும்பூர் அரசு பள்ளியில் பரபரப்பு!!

திருச்சி அருகே அரசுப் பள்ளி கழிவறையில் பிறந்த குழந்தை இறந்த நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Baby found dead in thiruverumbur government school toilet

திருச்சி அருகே அரசுப் பள்ளி கழிவறையில் பிறந்த குழந்தை இறந்த நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தது.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எச்சரிக்கை... 10 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படை விரைவு... தலைமை செயலாளர் இறையன்பு தகவல்!!

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து குழந்தை அங்கு எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்களை ஏமாற்றும் தமிழக அரசு.. இது பெருங்கொடுமை.! சீமான் ஆவேசம்.!

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி கழிவறையில் பிறந்த குழந்தை இறந்த நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios