சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் திடீரென சுருண்டு விழுந்த பக்தர்; நொடிப்பொழுதில் நிகழ்ந்த சோகம்

திருச்சி சமயபுரம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஆந்திர பக்தர் வரிசையில் நின்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

andhra pradesh devotee death in samayapuram mariamman temple for chest pain in trichy vel

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து  தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும் பல்வேறு நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று விட்டு நேற்று சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றிருந்தனர். அப்போது விஜயவாடா,  ராணிகாரு கோட்டையைச் சேர்ந்த வெங்கடா கொண்டா ரெட்டி(வயது 69) என்பவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். 

மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றொர்; மாவட்ட ஆட்சியரின் செயலால் நெகிழ்ச்சி

உடனடியாக மாரியம்மன் கோவில் முதலுதவி சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்த போது வெங்கடகொண்டாரெட்டி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் முதலுதவி சிகிச்சை மையம் மருத்துவர், சமயபுரம் காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த வெங்கட கொண்டா ரெட்டி உடலை உறவினர்களின் வேண்டுகோள் படி அவர்களிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் இராவணனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு

இதனையடுத்து இரவு கோவில் நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து இறந்த உடலுக்கு மாலை மரியாதையுடன்  ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios