'சவாலான பணியை எதிர்கொண்டுள்ளோம்.. ஒட்டுமொத்த அரசு துறைகளும் முயன்று வருகிறது'..! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!

ரிக் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு வந்தாலும் பல அடி ஆழத்திற்கு பாறைகள் இருப்பதால் இந்த பணிகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் மீட்பு படையினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

all the departments of tamilnadu government are working together to rescue surjith

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ என்பவரது மகன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முன்தினம் மாலை 5.40 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க கடந்த 40 மணி நேரமாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

all the departments of tamilnadu government are working together to rescue surjith

30 அடியில் விழுந்து இருந்த குழந்தை தற்போது 100 அடியில் சிக்கி இருக்கிறது. குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டு ஆழ்துளை கிணற்றுக்கு அருகே குழி தோண்டப்பட்டு அதன் மூலமாக குழந்தை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றது.

all the departments of tamilnadu government are working together to rescue surjith

ரிக் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு வந்தாலும் பல அடி ஆழத்திற்கு பாறைகள் இருப்பதால் இந்த பணிகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் மீட்பு படையினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த இரண்டு நாட்களாக அங்கேயே இருந்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அவரே நேரடியாக அவ்வப்போது மக்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்.

all the departments of tamilnadu government are working together to rescue surjith

மீட்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, குழந்தையை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் அரசின் அனைத்து துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 40 அடி வரை பாறை உள்ளதால் மீட்பு பணி சற்று கடினமாக இருப்பதாக கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios