மீண்டும் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி, காலணி மாலை... தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் அவலம்..!
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்தப் பெரியார் சிலையானது சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. அந்த சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்தனர். இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறைனர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த காலணி மாலையை அகற்றி, சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை துடைத்து தூய்மைபடுத்தினர். இந்தச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசியது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.