சொத்துக்குவிப்பு.. திருச்சி போக்குவரத்து துறை துணை ஆணையர் வீட்டில் அதிரடி சோதனை..!

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து பதவி உயர் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பணியிடமாறுதலானார். 

Accumulation of assets.. Trichy Transport Deputy Commissioner house raid

திருச்சி மாவட்ட  துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து பதவி உயர் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பணியிடமாறுதலானார். தற்பொழுது திருச்சி வட்டாரம் போக்குவரத்து பிராட்டியூர் அலுவலகத்தில் போக்குவரத்து மாவட்டத் துணை ஆணையராகம் பொறுப்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க;- ஓட்டுனர், நடத்துனர் மது அருந்திவிட்டு வந்தால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு

இந்நிலையில் திருவண்ணாமலையில் பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக இவர் குடியிருக்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அகிலா மேன்சனில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன் சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. அலறியடித்துக்கு கொண்டு ஓடிய ஊழியர்கள்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios