திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடை மீது உறவினர்களுடன் வந்து தாக்குதல் நடத்திய பெண் விஏஓ!!
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் கடை ஒன்றில் பெண் விஏஓ ஒருவர் தனது உறவினர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கள்பாலையம் பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி. இவர் தற்போது ஸ்ரீரங்கத்தில் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ளள ஒரு கடையில் புளி வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அது சரியில்லை எனக்கூறி வியாபாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் விஏஓ வாங்கிய பொருட்களை வியாபாரியின் கடை மீது வீசி எறிந்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த கடையில் வேலை பார்த்த பெண்கள் விஏஒவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளி திட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கள்பாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட உறவினர்களை வரவழைத்து கடை வியாபாரி மற்றும் பெண் ஊழியரை தாக்கி கடையை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல் துறையினர் மோதல் குறிம்து விசாரணை மேற்கொண்டனர்.
மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு; மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி ஒருவர் கொலை
மேலும் இது தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் சாதிக்பாஷா புகார் அளித்துள்ளார். வி.ஏ.ஓ கலைவாணி மற்றும் கடையை சூறையாடிய உறவினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை அச்சுறுத்தும் இது போன்ற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விஏஓ பதவியை தவறாக பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்லில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்ததில் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில் கடையில் பெண் விஏஓ மற்றும் அவரது உறவினர்கள் தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.