திருச்சி பேருந்து நிலையத்தில் சாமானிய பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் போலீஸ்
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்.
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அண்டை மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், காங்கேயம், முசிறி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் மைய மாவட்டமாக கருதப்படும் திருச்சி சத்திரம், மத்திய பேருந்து நிலையங்கள் இரவு, பகல் என எந்த நேரமும் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
இதனால், பயணிகளிடம் யாசகம் பெறும் நபர்கள், நடைபாதை வியாபாரிகள், தொழிலாளர்கள், இரவு நேர பேருந்து வசதி இல்லாத பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் என பலரும் நடைமேடையிலேயே படுத்து உறங்குவது வழக்கமாக உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக செல்லும் ஆசிரியர்கள்; மாணவர்கள் பாதிப்பு?
இதே போன்று இன்று காலை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அங்கு படுத்து உறங்கி உள்ளார். சத்திரம் பேருந்து நிலைய நடைமேடையில் படுத்து உறங்கிய அந்த பெண்ணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
யார் அந்தப் பெண்? எதற்காக அங்கு படுத்து உறங்கினார்? என்ன காரணத்திற்காக அந்த பெண் காவலர் அந்தப் பெண்ணை தாக்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பெண் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
ராணிப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதி கவலைக்கிடம்
இந்த வீடியோ வைரலான நிலையில் இந்த பெண்ணை தாக்கியது கோட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் தனலட்சுமி என தெரிய வந்தது. இந்நிலையில் அந்த பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.