ஒரே வாரத்தில் ஸ்கெட்ச் போட்டு 69 பேர் கைது! இது ஆரம்பம் தான்!குற்றவாளிகளை அலறவிடும் திருச்சி பெண் காவல் ஆணையர்
திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளில் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக எம்.சத்தியபிரியா கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் கஞ்சா, லாட்டரி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 69 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளில் மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராக எம்.சத்தியபிரியா கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர். அப்போது, திருச்சியில் நடந்துள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம் ரவுடிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்றும் சத்திய பிரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் பள்ளி கல்லூரிகள் அருகே மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 6 நபர்கள் மீது எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், கே.கே.நகர் காவல் நிலையத்தில் 1 வழக்கு உட்பட 6 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 15 நபர்கள் மீது கண்டோன்மெண்ட், ஸ்ரீரங்கம், பாலக்கரை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், அமர்வுநீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், பொன்மலை, காந்திமார்க்கெட், உறையூர் ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 வழக்கு உட்பட 11 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 139 துண்டு சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஒரு வாரத்தில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்ததாக 48 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 402 மதுபாட்டில்கள் கைப்பற்றி, குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா கூறியுள்ளார்.