அசுர வேகத்தில் மோதிய அரசு பேருந்து..! 50 ஆடுகள் உடல் சிதறி பரிதாப பலி..!
அந்த சாலையில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஆடுகள் சாலையை கடந்து செல்ல முயலவே, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா தென்னலூர் அருகே இருக்கிறது சாலைகளம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 43). விவசாயியான இவர் ஆட்டுமந்தை வைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது ஆட்டுமந்தையில் சுமார் 300 செம்மறி ஆடுகள் இருக்கின்றன. தினமும் காலையில் அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது துரைசாமியின் வழக்கம்.
அதன்படி இன்று காலையில் திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை துரைசாமி அழைத்து சென்றுள்ளார். திருச்சி - புதுக்கோட்டை சாலையில் இருக்கும் மண்டையூர் முருகன் கோயில் அருகே ஆடுகள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அந்த நேரத்தில் ஆடுகள் சாலையை கடந்து செல்ல முயலவே, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் தூக்கி வீசப்பட்டும் பேருந்து சக்கரத்தில் சிக்கியும் பரிதாபமாக உயிரிழந்தன. ரத்தவெள்ளத்தில் ஆடுகள் சிதறி பலியாகி கிடப்பதை கண்டு ஆட்டு உரிமையாளர் கதறி துடித்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!