திருச்சியில் திருட்டு குற்றவாளிகளை விடுவிக்கக்கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

5 persons arrested who make a road protest for demanding to release a accused in trichy

திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் மேகராஜ்(வயது 31). திருட்டு வழக்கில் அரியமங்கலம் காவல் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி எலிசபெத் (28) மற்றும் அவரது உறவினர்கள் பெரிய மிளகு பாறை அந்தோணி மகன் லாரன்ஸ் (17), சின்னப்ப தாஸ் மகன் மைக்கேல் (23), அந்தோணி மகன் ஆதாம்(23), பாலக்கரை கூனி பஜார் பகுதியில் சேர்ந்த ஏகாம்பரம் மகன் அறிவழகன்(24) ஆகிய 5 பேரும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மேகராஜ் என்பவரை விடுவிக்க கோரி ஒரு கட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

என்.எல்.சிக்காக மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா? மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் - அன்புமணி எச்சரிக்கை

ஆனால் தொடர்ந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதாலும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் மேற்படி  5 நபர்களையும் அரியமங்கலம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios