அதிகாலையில் நிகழ்ந்த சோகம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை..!

திருச்சியை சேர்ந்த ஒரு குடும்பம் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
 

4 members from same family attempted suicide

இன்று காலை திண்டுக்கல் அருகே இருக்கும் கொடை ரோடு பகுதியில்  நான்கு பேரின் உடல்கள் ரயிலில் அடிபட்டு சிதறி கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ரயில்வே காவலர்கள் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல்கள் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆதார் கார்டு மற்றும் டைரி ஒன்றும் கிடந்தது.

4 members from same family attempted suicide

அதில் இருந்த தகவலின் படி இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியைச் சேர்ந்தவ உத்தரபாரதி, சங்கீதா,அபிநயஸ்ரீ,ஆகாஷ் ஆகிய நான்கு பேரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். மேலும் முகங்கள் சிதைந்து போயிருப்பதால் ஆதார் கார்டில் இருப்பவர்கள் உயிரிழந்தவர்கள் தானா? என்பது முழுமையாக தெரியவில்லை. அது குறித்த விசாரணையை காவலர்கள் மேற்கொன்றுள்ளனர்.

4 members from same family attempted suicide

உயிரிழந்து கிடந்த ஒருவரின் சட்டை பாக்கெட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட டிக்கெட்கள் இருந்தன. திருச்சியில் இருந்து கொடைரோட்டுக்கு எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டும், கொடைரோட்டில் இருந்து கொடைக்கானலுக்கு எடுக்கப்பட்ட பேருந்து டிக்கெட்டும் இருந்தன. அவற்றையும் கைப்பற்றி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios