Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு காளையை அவதூறாக பேசியதால் விவகாரம்; ஒருவர் கொலை - அண்ணன், தம்பி கைது

திருச்சி மாவட்டத்தில் வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளையை அவதூறாக பேசியதில் எழுந்த பிரச்சினையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 persons arrested for murder case in trichy district
Author
First Published Jun 13, 2023, 11:38 AM IST

திருச்சி மாவட்டம்,  புங்கனூர் கீழத் தெருவில் வசித்து வருபவர் தமிழரசன்(வயது 50). இவருடைய சொந்த ஊர்  லால்குடி அடுத்த பூவாளூராகும். இவர்  தனது மனைவியின் சொந்த ஊரான புங்கனூரில்  கீழத் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு பிரசாந்த்(27) என்ற மகன் உள்ளார். பிரசாந்த் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. 

இதேபோல் அவர்களது உறவினர்களான புங்கனூர்  மேலத்தெருவைச் சேர்ந்த முத்துவீரன் மகன்கள் சரத்குமார்(26) ரஞ்சித்(24) இவர்களும் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு 10 மணி அளவில் புங்கனூர் அல்லித்துறை பிரதான சாலையில் உள்ள டீக்கடை முன்பு பிரசாந்த், அவரது தந்தை தமிழரசன் உடன் நின்று பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. 

உலகில் இப்படி ஒரு கோமாளியை எங்கும் பார்க்க முடியாது; மேடையில் முதல்வரை வறுத்தெடுத்த சசிகலா புஷ்பா

அப்போது அங்கு வந்த சரத்குமார், ரஞ்சித் ஆகிய இருவரும் பிரசாந்தை பார்த்து நீ என்ன ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறாய்? ஆட்டுக்குட்டி போல உனது மாடு உள்ளது. உனது மாட்டை அடக்கி விடுவோம் என்று கூறியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பிரசாந்தை  சகோதரர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால்  திட்டி அடிக்க வந்துள்ளனர். 

அதனை தடுக்க முற்பட்ட தமிழரசனின் மார்பு பகுதியில் அடி விழுந்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த தமிழரசன் உடனடியாக திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தேனியில் நீதிமன்றம் அருகே பெண் மீது காரை ஏற்றி கொல்ல முயற்றி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

இதனைத் தொடர்ந்து தமிழரசனின் மகன் பிரசாந்த் மற்றும் அவரது தம்பி பூவாளுரைச் சேர்ந்த அறிவழகன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்த சோமரசம்பேட்டை காவல் துறையினர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சரத்குமார், ரஞ்சித் இருவரையும் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios