திருச்சியில் தனியார் காப்பகத்தில் அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இயங்கி வந்த தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்த மாம்பழச்சாலையில் தனியார் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான குழந்தைகள் காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று விடப்படும் பச்சிளம் குழந்தைகள், தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்படும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில் இந்த காப்பகத்தில் 15 குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி போடப்பட்டதில் 8 குழந்தைகளுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடனடியாக குழந்தைகள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் அதிரடி கைது
இதனைத் தொடர்ந்து சிகிச்சை நிறைவு பெற்ற 2 குழந்தைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் 6 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் காவல் நிலைய வாசலில் காதலன் செய்த செயலால் காவலர்கள், பெற்றோர் அதிர்ச்சி
கடந்த பிப்ரவரி மாதமும் இதே காப்பகத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை ஒன்று உயிரிழந்திருந்த நிலையில், தற்போது மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.