Asianet News TamilAsianet News Tamil

மோசடி புகார்.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா மீது  நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த ஜனவரி 31ம் தேதி கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

Fraud complaint.. Case registered under 5 sections against suspended govt college principal tvk
Author
First Published Feb 3, 2024, 1:54 PM IST

திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு அந்த பதவியையும் கீதா வகித்து வந்தார். 

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் தமாகா? எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பால் அதிர்ச்சியில் பாஜக?

பின்னர் அந்த பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த பொறுப்பில் இருந்து கீதா விடுவிக்கப்பட்டதை அடுத்து கல்லூரி முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் கீதா மீது  நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த ஜனவரி 31ம் தேதி கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: Vijay politics : விஜய்யின் அரசியல் ஆசைக்கு காரணம் என்ன.? எப்போது ஜெயலலிதாவுடன் மோதல் உருவானது? ஏன்?

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios