தென்மேற்கு பருவமழை எப்போது.? முக்கிய தகவலை வெளியிட்ட வானிலை மையம்..!

தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

When the Southwest Monsoon...meteorological department important information

தென்மேற்கு பருவமழை வரு் 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட  செய்தி குறிப்பில்;-  அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் மே 13ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். அந்தமான் நிகோபார் பகுதியில் வரும் 16 ல் தென்மேற்கு பருவமழை  தொடங்குவதற்கான அறிகுறிகள் உள்ளன.

When the Southwest Monsoon...meteorological department important information

மேலும், தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன். சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. 

When the Southwest Monsoon...meteorological department important information

கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. செங்கோட்டை, குளச்சல், சித்தாறு, சிவலோகம் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios