திசையன்விளை பேரூராட்சி.. திமுக வெற்றியை பறித்த அதிமுக.. குலுக்கலில் அடித்த ஜாக்பாட்.!

நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர், பாஜக, தேமுதிக சார்பில் தலா ஒருவரும், சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேட்சைகள் சமீபத்தில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

thisayanvilai Town Panchayat... AIADMK Win

திசையன்விளை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு 9 ஓட்டுகள் கிடைத்தது. இதனையடுத்து, குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் 2 பேர், பாஜக, தேமுதிக சார்பில் தலா ஒருவரும், சுயேட்சைகள் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதில் 2 சுயேட்சைகள் சமீபத்தில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். 

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த 9 கவுன்சிலர்கள் ஜான்சிராணி, ஜெயகுமார், ஆறுமுக தேவி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். அதில், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவு தர வேண்டும் என மிரட்டுவதாகவும், எனவே எங்கள் அணியினருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளித்து தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்து, மனுதாரர்கள் 9 பேருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அமைதியாக நடத்தவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 12-வது வார்டு கவுன்சிலர் சுபீனாவுக்கு முன்மொழிய யாரும் வரவில்லை. இதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி 6-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு சமீபத்தில் திமுகவில் சேர்ந்த கமலா நேரு திமுக சார்பில் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக சார்பில் மாவட்ட மகளிரணி செயலாளரும், பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலருமான ஜான்சி ராணி மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் நடந்தது. இதில் 18 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இதில் 2 பேருக்கும் தலா 9 ஓட்டுகள் கிடைத்தது. இதனால் குலுக்கல் முறையில் வெற்றியை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios