தமிழக அரசு பேருந்துகளில் ஜொலி ஜொலிக்கும் ஜெய் அனுமான்... வடக்கில் இருந்து தமிழகத்திற்கும் பரவிய மத அடையாளம்..!
தமிழக அரசுப் விரைவு பேருந்துகளில் இந்து மதக் கடவுளான அனுமான் படமும், வாசகமும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்சசையை ஏற்படுத்திளயுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசுப் விரைவு பேருந்துகளில் இந்து மதக் கடவுளான அனுமான் படமும், வாசகமும் இடம்பெற்றுள்ளது பெரும் சர்சசையை ஏற்படுத்திளயுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனியார் பேருந்துகள், வாகனங்களில் கடவுள்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட படங்களும் வசனகங்களும் இடம் பெறுவது வழக்கம். அதேபோல், இந்து மத நம்பிக்கை கொண்டவர்களில் சிலர் தங்கள் வாகனங்களில் தனக்கு பிடித்த கடவுள் புகைப்படத்தை வைத்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில், சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு விரைவு ஏசி பேருந்து திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கிளம்பியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், மதுரை வழியாக நேற்று காலை சென்னை சென்றடைந்தது. இந்த பஸ்சின், பக்கவாட்டு கண்ணாடியில் ஆஞ்சநேயர் படம் ஒட்டப்பட்டு, ‘ஜெய் அனுமான்’ என்ற வாசகமும் ஒட்டப்பட்டிருந்தது. அனைத்து சமூகத்தவரும் பயணிக்கும் அரசு பேருந்தில் ஒரு குறிப்பிட்ட மதச்சார்பு படங்களை ஒட்டுவது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த பேருந்து படம் வெளியிடப்பட்டு, வைரலாக பரவியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதெல்லாம் அரசு பேருந்து தானா அல்லது பா.ஜ.க. கட்சி பேருந்துகளா?@gavastk @devpromoth @Stalin__SP @mkstalin @OfficeofminMRV pic.twitter.com/r0B5ZWSIbn
— Manikandan Shankar (@reportermani) October 14, 2019
இதனையடுத்து, பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் புகைப்படங்கள் மற்றும் வாசனங்கள் தற்போது அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக ரஃபேல் போர் விமானம் வாங்கிய போது டயர்களின் கீழ் எலுமிச்சை பழம், தேங்காய், பூக்கள் வைத்தும், முன்பகுதியில் ஓம் என்று இந்தியிலும் எழுதி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.