9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் அறிவிப்பு..!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைப் பெய்யக் கூடும். 

rain for 9 districts in tamilnadu

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைப் பெய்யக் கூடும். கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

rain for 9 districts in tamilnadu

மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

rain for 9 districts in tamilnadu

சென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல், சித்தார், சிவகோலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios