ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சம் - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான். இவரது மகள் மேரி. இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை மேற்கொண்டு வருகிறார். ஜானின் நிறுவனத்தில் தான் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த பேரின்பம் என்பவரின் மகன் சூர்யா வேலை செய்து வருகிறார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது!
இந்த நிலையில் சூர்யாவிற்கும், மேரிக்கும் பழக்கம் ஏற்பட அது காதலாக மாறியுள்ளது. இதை தெரிந்த மேரியின் தந்தை சூர்யாவை பணியில் இருந்து நீக்கி விட்ட நிலையில் மேரியும், சூர்யாவும் கடந்த 3ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேரியின் தந்தை சூர்யாவை கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இருவரும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்தனர். ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த நிகழ்வு நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.