Asianet News TamilAsianet News Tamil

"யாராவது என்ன காப்பாத்துங்களேன்".. 300 அடி பள்ளத்தில் சிக்கி கொண்ட 3 தொழிலாளர்கள் பலி ..2 பேர் உயிருடன் மீட்பு

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் உடைத்து வைத்திருந்த கற்களை 3 லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

Nellai Quarrying of stone accident... 3 people killed
Author
Tirunelveli, First Published May 15, 2022, 9:34 AM IST

நெல்லை பொன்னாக்குடியில் கல்குவாரி விபத்தில்  6 பேர் சிக்கிய நிலையில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் உடைத்து வைத்திருந்த கற்களை 3 லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி கொண்டனர். இதுகுறித்து உடனே காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், 300 அடி பள்ளத்தில் 2 ஜேசிபி இயந்திரம் மற்றும் 2 லாரிகள் சிக்கி கொண்டதாக கூறப்பட்டது. 

ராட்சத பாறை விழுந்த இடத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், 2  பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த தொழிலாளி கூறிய தகவலின் மூலம் விஷயம் தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios