நெல்லை கண்ணணுக்கு திடீர் உடல்நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் அனுமதி..!
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் குடியுரிமை மாநாடு நடைபெற்றது. அதில் எஸ்டிபிஐ கட்சியினருடன் இலக்கியவாதியும், காங்கிரஸ் பேச்சாளருமான நெல்லை கண்ணன் பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.
நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்ய இறங்கி உள்ள நிலையில் அவரது உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் குடியுரிமை மாநாடு நடைபெற்றது. அதில் எஸ்டிபிஐ கட்சியினருடன் இலக்கியவாதியும், காங்கிரஸ் பேச்சாளருமான நெல்லை கண்ணன் பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை அவதூறாக பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் மீது பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்து டிஜிபியிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். ஆனால், அவர் கர்நாடகாவில் தலைமறைவாக உள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று காலை இவரது வீட்டின் முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர். அவரது வீட்டின் முன்பு பாஜக, இந்துமுன்னணி, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியனர் வீடு முன்பு குவியத் தொடங்கினர். இதனையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லை தாம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என காவல் துறையினரிடம் அனுமதி கேட்டார். பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நெல்லை கண்ணணை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.