இஸ்லாமியர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி சோலியை முடிங்க என்று சொல்லி வாய்விட்டி மாட்டிக்கொண்ட நெல்லை கண்ணன் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும், அவரை விடாத பாஜகவினர் போன் கால்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தன்னை ஆபாசமாக பேசுவதால் நெல்லை கண்ணன் நிம்மதி இழந்து தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார். 

கடந்த மாதம் நெல்லை நடைபெற்ற எஸ்டிபிஐ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வெளியே வந்துள்ளார். ஆனால், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். மேலும், இந்துக்கள் அவரை ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு அழைக்க வேண்டாம் என பாஜக தலைவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாஜகவினர் சமூக வலைதளத்திலும், தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுவரை இல்லாத அளவு புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடித்து திட்டி வருவதாகவும் இதனால் வேறு வழியின்றி தனது செல்போன் எண்ணை நெல்லை கண்ணன் ஆஃப் செய்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நெல்லை கண்ணன் 'அன்புள்ளம் கொண்டவர்களே... நான்கே நான்கு பேரை வைத்துக்கொண்டு நிறைய பேர் நம்மை எதிர்ப்பது போல் நாலு பேர் எழுதுகின்றனர். நம்முடைய ஐடியில் அவர்களை கண்டுபிடித்து விட்டனர். இதுவரை அவர்கள் ஆபாசமாக மனித நாகரீகமே இல்லாமல் எழுதியவை அனைத்தையும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புகாரா அனுப்பியுள்ளேன்.

அவரும் தமிழர் தானே... தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியாமலா இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். நெல்லைக்கண்ணனை 4 பேர்கள் மட்டும் தான் தரக்குறைவாக பேசியதாகவும் மீதமுள்ளவர்கள் அவரை திட்டமில்லை என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தான் ஒரு சுகர் பேஷண்ட் எனவும், இரவில் செல்போன் செய்து காதில் கேட்க முடியாத வார்த்தைகளில் திட்டுவதாக தனது ஆதரவாளர்களிடம் மனம் உடைந்து கதறியபடி கூறியுள்ளார்.