கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.

நெல்லையில் நேற்று 123 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 765 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 170 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,119. காயல் பட்டினத்தை சேர்ந்த 58 வயது ஆண், ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 50 வயது பெண் ஆகிய இருவரும் நேற்று உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 150 பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 1300.

தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 683 ஆக உயர்ந்துள்ளது. சிவகிரி, சேர்ந்தமரம், சாம்பவர் வடகரை, புளியரை காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இந்த 4 காவல் நிலையங்களும் மூடப்பட்டன. ஆலங்குளம் அரசு மருத்துவ மனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ​கொரோனா தொற்றால் கடைய நல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர் ந்த 45 வயது நபர் உயிரிழந்தார்.