உயிருக்கு உத்தரவாதம் இல்லை; துப்பாக்கிக்கு உரிமம் கோரி அரசு மருத்துவர் கோரிக்கை

சங்கரன்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஒருவர் தனது உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Government doctor request for gun license in Tenkasi district vel

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அரசு மருத்துவராக மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவராக உள்ளார்.

அரசு மருத்துவரின் தாத்தா மரிய மனோகரன் என்பருக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக அருகில் உள்ளவர்கள் மருத்துவரின் அம்மாவை தாக்கி வேலியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் பலத்த காயமடைந்த மருத்துவரின் தாய் முத்தம்மாள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு மனித தவறே காரணம்; ஆட்சியர் பேட்டி

இதே போல் கடந்த மாதம் திமுக பெண் கவுன்சிலர், அருவடைய கணவரும் மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையில் பணியில் இருந்த மருத்துவர் முத்துக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் மருத்துவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாணையும் நடந்தது.

அரசு மருத்துவர் முத்துக்குமாருக்கு அவருடைய கிராமத்தை சார்ந்தவர்களும் உறவினர்களும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அதனால் என்னுடைய குடும்பத்தினருக்கு பாதுகாபற்ற சூழல் உருவாகி வருவகிறது. இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோன காலத்திலும் பல்வேறு உயிர்களை காப்பாற்றிய அரசு மருத்துவராகிய எனக்கு என்னுடைய உயிருக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும் என மாவட் ஆட்சியர், மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக அரசு மருத்துவர் பேசி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உங்களால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? அண்ணாமலைக்கு துரைவைகோ சவால்

பொதுமக்களின் உயிரை காப்பாற்ற கூடிய அரசு மருத்துவருக்கு அவருடைய உயிரை பாதுகாக்க துப்பாக்கி வைக்க உரிமம் வழங்க வேண்டும் என வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சேர்ந்தமரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாகவும், விசாரணை செய்யாமல் இரண்டு தரப்பு புகார் மனுவினையும் பெற்று வழக்குபதிவு செய்துள்ளார். என்பது குறிப்பிடதக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios