நாய் குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி மற்றொரு ட்ராக்ட்டர் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே இருக்கும் முதலியார் பட்டி என்கிற கிராமத்தை சேர்த்தவர் ரவி. இவர் அவரச வேலை காரணமாக, தன்னுடைய 10 வயது மகள் சுவிட்ச்சா என்பவரை பைக்கில் ஏற்றி கொண்டு தன்னுடைய சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திற்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும், அகஸ்தியர்பட்டி அருகே வந்துகொண்டிருந்த போது, திடீர் என ஒரு தெரு நாய் குறுக்கே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரவி, திடீர் என நாயை காப்பற்ற வண்டியை திசைதிருப்பி உள்ளார்.

அப்போது, செங்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி  மீது இவர்களுடைய வாகனம் மோதி, நிலை தடுமாறி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் 42 வயதாகும், தந்தை மற்றும் 10 வயது மகள் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

நாயை காப்பாற்ற போய்... அந்த நாய் இவர்களுக்கு எமனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.