காதல் விவகாரம்... கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை..!

நெல்லை அருகே காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

college student commit sucide... police investigation

நெல்லை அருகே காதல் விவகாரத்தால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சாந்தி (19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சாந்திக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.

college student commit sucide... police investigation

சம்பவத்தன்று சாந்தியின் உறவினர் ஒருவர் ஜோடியாக இருவரும் செல்வதை பார்த்துள்ளார். இதனால், பெற்றோர் சாந்தியை கடுமையாக அவனுடன் பழக கூடாது என எச்சரித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios