நெல்லை அருகே நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை அருகே நின்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த சிலர் கோவில்பட்டியில் உள்ள உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு காரில் குடும்பத்துடன் சென்றுக்கொண்டிருந்தனர். அந்த காரை சுகன் (24) என்பவர் ஓட்டி வந்தார். காரில் மொத்தம் 6 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக சாலையில் கண்டெய்னர் லாரி நின்றுக்கொண்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜம்மாள், சரோஜா, ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுநர் சுகன், செல்வலட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய 3 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக் அனுப்பி வைத்துள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.