Asianet News TamilAsianet News Tamil

அரசியல் ஆதாயத்திற்காக புல்வாமா தாக்குதல்? பாஜகவை விட ஆபத்தானவர்கள் யாரும் இல்லை - கனிமொழி பரபரப்பு குற்றச்சாட்

புல்வாமா தாக்குதல் அரசியல் ஆதாயத்திற்காக இருந்தால், பாஜக.வை விட இந்த நாட்டிற்கு ஆபத்தானவர்கள் யாரும் இல்லை என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

bjp did pulwama attack for political benefit said dmk mp kanimozhi in tirunelveli vel
Author
First Published Apr 2, 2024, 11:42 PM IST

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று திருநெல்வேலி டவுன் வாகைமுடி முனை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி இந்த எழுச்சி கூட்டத்தைக் காணும் போதே நமது வேட்பாளர் ராபர்ட் புரூஸ்ன் வெற்றி தெரிகிறது.  இந்த தேர்தல் என்பது நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்க ஒரு தேர்தல், எப்படி ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டு, உடைமைகள் பறிக்கப்பட்டு நம்மிடம் இருந்த எல்லாவற்றையும் பறித்து எடுத்துச் சென்றார்களோ. அதே போல இந்த பாஜக ஆட்சியிலே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை ஜிஎஸ்டி என்ற பெயரால் எல்லாவற்றையும் பிடுங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். 

அரசியல் லாபத்திற்காக பாஜக மக்களிடையே பிரச்சனைகளை உருவாக்கி அவர்களைப் பிரித்து, இருக்கக்கூடிய மக்களை நிம்மதி இல்லாமல் தவிக்கக்கூடிய சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு ஒரு உதாரணத்தை நான் சொல்ல வேண்டும் என்றால் மணிப்பூர். பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற மாநிலம் தான். அந்த மணிப்பூரில் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே பிரச்சனைகளை தூண்டி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு, வீடுகளை எரிக்கக் கூடிய, அங்கே இரண்டு குழுக்களுமே அவர்கள் வீட்டில் இல்லை எல்லாருமே முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நீங்கள் வாயால் சுடும் வடைகள் எங்கள் பசியை போக்குவதில்லை; திருச்சியில் மத்திய அரசை வசைபாடிய கமல்ஹாசன்

தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பெண்கள், குழந்தைகள், வயது முதியவர்கள், மருந்து இல்லை, மாத்திரை இல்லை, பால் இல்லை, சாப்பிடவில்லை அடிப்படை தேவைகள் கூட இல்லாத ஒரு சூழல். நாளை அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும்? அவர்களால் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியுமா முடியாதா என்ற நிலை. உலகம் முழுதும் சுற்றி வரக்கூடிய நரேந்திர மோடி அவர்கள் அங்கே மணிப்பூருக்குச் சென்று கண்ணீரோடு நிற்கும் மக்களைக் ஒருமுறை கூட சந்தித்தது இல்லை.

பல வருடமாக எங்களை இந்தி படிக்கச் சொல்கிறீர்கள். இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று சொல்கிறீர்கள், இந்தி படித்தால் தான் மூச்சு விடவும் முடியும் என்று சொல்கிறீர்கள். நாங்கள் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் இந்தியில் தான் பதில் வரும், கடிதம் எழுதினால் கூட இந்தியில் தான் பதில் வருகிறது. நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள், யார் பிரதமரைத் தடுத்து நிறுத்த முடியும் நீங்கள் தமிழ் கற்றுக் கொண்டால் தேச ஒற்றுமைக்கு நீங்கள் ஏதாவது ஒன்று செய்திருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நான் முதலமைச்சரிடம் சொல்லி நிச்சயமாக அவர் மகிழ்ச்சியோடு ஒரு தமிழ் ஆசிரியரை உங்களுக்கு அனுப்புவார். தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்.

இப்போது கச்சதீவைப் பற்றிப் பேசுகிறார்கள், திடீரென்று இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்டு தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போலப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய தேசப்பற்று எந்த அளவுக்கு இருப்பது என்பதை ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநராக  இருந்த சத்ய பால் மாலிக் அவர்கள் 2019 நம்முடைய ராணுவ வீரர்கள் சென்ற அந்த வாகனங்கள் செல்கிறது, அந்த வாகனங்களை எதிர்த்து ஒரு வண்டி வந்து அந்த வண்டியில் இருக்கக்கூடிய அந்த நபர் குண்டு வைத்துக்கொண்டு நம்முடைய  ராணுவ வீரர்களை முட்டி, 40க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் இறந்து விட்டனர். ஒரு சூசைட்பாம், அது 2019 தேர்தலுக்கு முன்னால் சரியாக நடக்கக்கூடிய சம்பவம் இது.

ED, IT எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி; ஜெயில கட்டுனதே எங்களுக்காக தான் தம்பி - செல்லூர் ராஜூ

இதைச் சொல்லி தேசப்பற்றைப் பற்றிப் பேசி தான் அதிகமாக ஓட்டுக்கள் வாங்கினார்கள். தேர்தலுக்குப் பிறகு சத்ய பால் மாலிக் கேட்கிறார், அந்தப் பாதையில் ராணுவ வீரர்கள் செல்வதற்கு யார் அனுமதித்தது? எதிர்த்து வர வண்டிக்கு யார் அனுமதி கொடுத்தது? எப்படி ஒரு வண்டியில் இவர்களைத் தாக்கக்கூடிய அளவிற்கு ஒரு வண்டி வருகிறது என்று கேட்கிறார்.

நான் கேட்கிறேன், ஒருவேளை இது அரசியல் ஆதாயத்துக்கு செய்யப்பட்டது என்றால், இவர்களைவிட இந்த நாட்டுக்கு ஆபத்தாளர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏதாவது கேள்வி கேட்டால் நம்மைத் தேசத்துரோகி என்கிறார்கள், அர்பன் நக்சல் என்கிறார்கள். இதைவிடத் துரோகம், இந்த நாட்டுக்காக உயிரைப் பயணம் வைத்து எதிரிகளோடு போராடிய ராணுவ வீரர்களை, அரசியல்காக பலி கொடுப்பது என்பது மிகக் கேவலமான ஒன்று, வேறு ஒன்றும் இருக்க முடியாது. இவர்களுக்கா இந்த நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே நாம் சிந்திக்க வேண்டும். 

பிரதமர் மோடி என்ன செய்தாலும் ஏன் தமிழ்நாட்டில் அவர் தங்கியிருந்தாலும் மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் என்றுமே நோட்டவுக்கு கீழ் தான். சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி மக்களிடம் நேரடியாகச் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருவது திமுக, ஆனால் பாஜக இதுவரை சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களைச் சந்திக்கிறது.

நாம் தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளது போல சமையல் எரிவாயுவின் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும், பெட்ரோல் விலை 75 ஆகவும் டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும். ரிசர்வ் வங்கிக்கும் கோடக் மகேந்திரா வங்கிக்கும் இடையே விதி மீறல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது, பாஜகவிற்குக் கோடிக்கணக்கில் தேர்தல் பத்திரம் கோடாக் வங்கி வாங்கி கொடுத்தவுடன், ரிசர்வ வங்கி அவர்களுக்கு கேட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. வீடு, கடைகளில் கழுத்தில் கத்தி வைத்து கேட்பது போல, அமலாக்கத்துறை வருமானவரித்துறையை ஏவி சோதனை செய்து தேர்தல் பத்திரம் மூலம் நிதியாக பாஜக பெருகிறது எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios