Asianet News TamilAsianet News Tamil

நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு! எப்போதும் தெரியுமா?

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதீத கனமழை பெய்தது. 

Announcement of half-year exam dates in Nellai district tvk
Author
First Published Dec 30, 2023, 8:03 AM IST

நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கடந்த 17, 18 தேதிகளில் வரலாறு காணாத வகையில் அதீத கனமழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் கடல் போல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம், ஏரி, குளங்கள் உடைப்பால் பல கிராமங்களிலும், பள்ளிகளிலும் வெள்ளம் புகுந்தது. 

Announcement of half-year exam dates in Nellai district tvk

இதனையடுத்து அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மறுஉத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை  என அம்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். மேலும் மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார். அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  

Announcement of half-year exam dates in Nellai district tvk

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையும், 11, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 - 11ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios