நெல்லை உவரி சோதனைச் சாவடி வழியாக கடத்தல் முயற்சி! - 169 கிலோ குட்கா வஸ்துகள் பறிமுதல்!
நெல்லை மாவட்டம் உவரி சோதனைச் சாவடி வழியாக முறைகேடாக மண்ணெண்ணெய் மற்றும் குட்கா கடத்தப்படுவதாக வந்த இரகசிய தகவலின் பேரில் உவரி கடலோர காவல்படையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் 400 - லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெய் மற்றும் 169 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரி கோவில் பகுதியில் வந்த ஒரு காரை மறித்து அதை சோதனை செய்தனர். அப்போது ஒரு மூடையில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திசையன் விளை அருகே உள்ள காளிகுமாரபுரத்தை சேர்ந்த வாலகுரு ( வயது 37) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் திவீர விசாரணை மேற் கொண்டனர். அப்போது அவர் விற்ப னைக்காக குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் கோடவிளை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 8 மூட்டைகளில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மதுரை AIIMS தலைவராக நாகராஜ் வெங்கட்ராமன் தேர்வு... மத்திய சுகாதாராத்துறை அறிவிப்பு.
இதனை தொடர்ந்து 9 குட்கா மூடைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வாலகுருவை கைது செய்தனர். இதன் மொத்த எடை 169 கிலோ ஆகும். தொடர்ந்து இவர் எங்கிருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்தார். யாரிடம் விற்பனை செய்வதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தார். இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட பட்டாசு - களம் இறங்கிய மதுரையான்ஸ்.!