நெல்லையில் மீண்டும் கந்துவட்டி கொடூரம்; ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.20 ஆயிரம் கடனுக்கு வாரம் ரூ.2 ஆயிரம் வட்டி வசூலிக்கும் நபர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் 80 வயது முதியவர் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே நம்பித்தலைவன் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மலையப்பன் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இதற்காக மலையப்பன் ஆறுமுகத்திடம் வாரம் 2000 ரூபாய் வட்டி பணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. 20,000 ரூபாய் கடனுக்கு வாரம் 2000 ரூபாய் வட்டி மட்டுமே செலுத்துவதால் ஆறுமுகம் கடனை அடைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
நாகையில் சர்க்கரை நோயால் உயிரிழந்த 8 மாத குழந்தை
இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக வட்டி பணம் கொடுக்காததால் மலையப்பன் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று அவரை அவமானப்படுத்தும் வகையில் திட்டியதோடு ஆறுமுகத்தின் மனைவியை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மலையப்பன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆறுமுகம் இன்று தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
அப்போது திடீரென ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் முதியவர் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி அவரை பத்திரமாக மீட்டனர் பின்னர் அனைவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இது தொடர்பாக சத்தியவாணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது கணவர் கூலி வேலை செய்கிறார் நான்கு மாதமாக வட்டி பணம் கொடுக்க முடியவில்லை.
திருப்பூரில் தமிழக இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது
அதனால் மலையப்பன் அடிக்கடி வீட்டிற்கு வந்து எங்களை மானபங்கப்படுத்துகிறார். அதனால் தான் மனமடைந்து எனது கணவர் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இரண்டு குழந்தைகள், 2 பெரியவர்கள் என 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.