Asianet News TamilAsianet News Tamil

உடைமாற்றும் போது ஊசியை விழுங்கிய சிறுமி.. 3.5 நிமிடங்களில் அகற்றி தஞ்சை மருத்துவர்கள் சாதனை..

உடை அணியும் போது தவறுதலாக ஊசியை விழுங்கி நுரையீரலில் சிக்கி இருந்த 4 செமீ நீளமுள்ள ஊசியை கத்தி இன்றி, ரத்தம் இன்றி (Bronchoscopy) என்ற நவீன தொழில் நுட்பம் மூலம் மூன்றரை நிமிடங்களில் அகற்றி 14 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்து உள்ளனர்.

Thanjavur Hospital Doctors Remove 1.5 Inch Needle From Girls's Lung In Record Time Rya
Author
First Published May 28, 2024, 1:45 PM IST | Last Updated May 28, 2024, 1:45 PM IST

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஊசியை வாயில் வைத்து உடை மாற்றி உள்ளார். அப்போது எதிர்பாரத விதமாக ஊசியை விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது

உடனடியாக சிறுமியின் பெற்றோர் தஞ்சையில் உள்ள தனியார் ( ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர்) மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவ குழுவினர் நுரையீரலில் ஊசி சிக்கி இருப்பதை கண்டனர்.

ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வாங்கவில்லையா? எப்போது கிடைக்கும்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

ப்ரான்கோ ஸ்கோபி  (Bronchoscopy) என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் மூன்றரை நிமிடங்களில் ஊசியை அகற்றி சிறுமியின் உயிரை காப்பாற்றி சாதனை புரிந்து உள்ளனர்.

ப்ரான்கோ ஸ்கோபி என்பது ஒரு மருத்துவ முறையாகும், இது மருத்துவர்கள் சுவாசப்பாதைகளைப் பார்க்கவும், நுரையீரல் நோயைக் கண்டறியவும் அல்லது நுரையீரல் நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. இது ஒரு ப்ரான்கோஸ்கோப்பைப் பயன்படுத்துகிறது, இது நுரையீரலை உள்ளே இருந்து பார்க்க ஒரு ஒளி மற்றும் கேமராவுடன் கூடிய மெல்லிய குழாய் ஆகும்.

இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் சென்னையில் இருந்து இதேபோன்ற ஒரு வழக்கில், போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர்கள், 5 வயது சிறுவனின் நுரையீரலில் இருந்து எல்இடி விளக்கை ப்ரோன்கோஸ்கோபி மூலம் அகற்றி உயிரைக் காப்பாற்றினர். சிறுவன் 5 செ.மீ நீளமும் 2 காம் அகலமும் கொண்ட பல்பை விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக விழுங்கிவிட்டான். 

அண்டை மாநிலப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை... மூடப்படும் தமிழ்த்துறைகள்- டிடிவி தினகரன்

இருப்பினும், அது அவரது குடல் வழியாக செல்லாமல் நுரையீரலில் சிக்கிக்கொண்டது. மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் ஆர் மது கூறுகையில், நுரையீரலுக்குள் பொருள்கள் நுழைவதை அவர் கையாண்டிருந்தாலும், ஒரு சிறுவன் எல்இடி பல்பை விழுங்கியதைக் கண்டது இதுதான் முதல் முறை.

இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக புகார் தெரிவித்ததை அடுத்து சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அப்போது அந்த சிறுவனை பரிசோதனை செய்த சிறுவர்கள், பல்பின் கண்ணாடிப் பக்கத்தில் பிடிபடாமல் இருப்பதை உறுதி செய்து  ப்ரோன்கோஸ்கோபி மூலம் அதனை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios