நிர்வாக வசதிகளுக்காக நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தையும் கஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கப்பட்டு மாவட்டத்தையும் புதிதாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

சட்டப்பேரவையில் 110 விதியில் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி, ’’அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிர்வாக வசதிகளுக்காக இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி 33 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களையும் சேர்த்து 35 மாவட்டங்களாக அதிரித்துள்ளன. தென்காசி மாவட்டத்திற்குள் குற்றாலம், புளியங்குடி கடையநல்லூர் ஆகிய பகுதிகள் அடங்கும்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் மாவட்டம் உருவாக்க கோரிக்கைகள் எழுந்து வருவதால் புதிதாக கும்பகோணம் மாவட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.