மூன்றாவது முறையாக நிரம்பி வழிய இருக்கும் மேட்டூர் அணை..! காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு..!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் இருக்கும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவான 120 அடியை 43 வது முறையாக கடந்த மாதம் 7 தேதி எட்டியது. அதன்பிறகு மீண்டும் 24 தேதி அணை முழுவதும் நிரம்பியது. அதனால் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்தது.
அதன்பிறகு கர்நாடகாவில் மலையின் தீவிரம் குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை மீண்டும் நிறமான தொடங்கியுள்ளது.
நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரத்து 848 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இன்று நீரின் அளவு மேலும் அதிகரித்து 19 ஆயிரத்து 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. பாசனத்திற்காக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாக இருக்கிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியை எட்டியிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.