ராமநாதபுரத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு... தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!!
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆம் தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் 115 ஆவது தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழா வரும் 30 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த மகன்... கடுப்பான தந்தையின் செயலால் பரபரப்பு!!
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிவேகமாக வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூiஐயை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகள் அடைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரத்திற்கு தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? நீதிபதிகள் காட்டம்!!
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா வரும் அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி அரசு விழாவாக நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சரனை ஏற்படாத வகையில் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மூடப்படும். மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.