Tamilnadu Heavy Rain:அடுத்த 2 மணிநேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் கனமழை.!

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. அதேபோல சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

Heavy rain warning in these 7 districts for the next 2 hours

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி

தமிழகம் முழுவதும் பரவலாக கோடையின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை கடந்ததது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பசலனம் காரணமாக கோடை வெயிலுக்கு மத்தியிலும் கோவை, நீலகிரி, நெல்லை, நாகை, தென்காசி, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Heavy rain warning in these 7 districts for the next 2 hours

கனமழை

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. அதேபோல சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும், நகரின் வெப்பநிலை 35-27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் தெரிவித்திருந்தது.

Heavy rain warning in these 7 districts for the next 2 hours

மீனவர்களுக்கு  எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, தமிழக கடரோப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios