Crime: பள்ளி திறந்த முதல் நாள்; ஆர்வமாக சென்ற அரசு ஆசிரியரை வழிமறித்து போட்டு தள்ளிய மர்ம கும்பல்

இராமநாதபுரத்தில் காலை நேரத்தில் பள்ளிக்குச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரை வழிமறித்த மர்ம கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

government school teacher killed by suspicious person in ramanathapuram vel

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கண்ணன்(வயது 51). தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதன்படி பள்ளியின் முதல் நாளை முன்னிட்டு ஆசிரியர் கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

Bus Accident: திண்டுக்கல்லில் ஸ்வீட் ஸ்டாலில் புகுந்த அரசுப் பேருந்து; அலறியடித்து ஓடிய பெண்கள்

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஆசிரியரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கண்ணனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் நிலைக்குலைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதாவின் பேச்சு சிறுபிள்ளை தனமாக உள்ளது - மாணிக்கம் தாகூர்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ரியல் எஸ்டேட் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சினையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த ஆசிரியர் கண்ணன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios