குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல அருள் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக, பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் ராமேஸ்வரத்தில் தெரிவித்துள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்  நேற்று அதிகாலையில் அக்னிதீர்தக் கடலில் பித்துருக்களுக்கு பிண்டம், எள்ளு வைத்து தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்குப் பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில், தை அமாவாசையையொட்டி, நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தை அமாவாசையான இன்று ராமேஸ்வரம் ராமநாத சாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தத்தை யாரும் எதிர்க்க வேண்டாம். அது நாட்டு மக்களுக்கு பயன்தரக் கூடியது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக் கொண்டேன் என்றார்.