தண்ணீருக்கு அடியில் தங்கம் தேடும் சுங்கத்துறை அதிகாரிகள்; ராமநாதபுரத்தில் தேடுதல் வேட்டை
ராமநாதபுரம் மாவட்டம் நொச்சியூரணி கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை துாத்துக்குடி முத்துக்குளிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் சுங்கத் துறை அதிகாரிகள் தேடினர்.
நேற்று முன்தினம் சுங்கத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அருகே வேதாளை நல்ல தண்ணீர் தீவு கடற் கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பைபர் படகை சோதனை செய்ய முயன்றனர். அதிகாரிகளை கண்டதும் படகில் இருந்த 4 பேரும் படகை பாதை மாற்றி வேகமாக தப்பினர்.
இருப்பினும் சுங்கத்துறை அதிகாரிகள் துரத்திச் சென்றனர். அப்போது புதுமடம் கடற்கரை அருகே படகை நிறுத்திவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. அதிகாரிகள் அந்த படகை சோதனையிட்ட போது இலங்கையில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
“எங்க ஏரியா உள்ள வராத” காட்டுக்குள் சென்ற நபரை துரத்தியடித்த யானை; தலைதெறிக்க ஓட்டம் பிடித்த பயணி
கடத்தல்காரர்களை துரத்திய போது ஒரு பெட்டியை கடலில் வீசியுள்ளனர். இதனால் நொச்சியூரணி கடல் பகுதியில் துாத்துக்குடியைச் சேர்ந்த முத்துகுளிக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் 5 மணி நேரத்திற்கும் மேலாக சுங்கத்துறையினர் தேடினர். தங்க கட்டிகள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்தக்கட்டமாக கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் தேட முடிவு செய்துள்ளனர்.