கடைசி நாளில் வந்த அடுத்த ஓபிஎஸ்: ராமநாதபுரத்தில் மொத்தம் 6 ஓபிஎஸ் வேட்புமனுத் தாக்கல்!

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மேலும் ஒரு ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்

An another o panneerselvam filed his nomination in ramanathapuram ahead of loksabha elections smp

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. முன்னதாக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனால், பாஜக தனது தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை தமிழ்நாட்டில் அமைத்துள்ளது. அக்கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவுக்கு (ஓபிஎஸ் அணி) ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாகவும், சுயேச்சை சின்னத்தில் அவர் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து, அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மட்டும் இதுவரை மேலும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அடேங்கப்பா முகேஷ் அம்பானி குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுக்கு இத்தனை கோடி ரூபாய் சொத்தா?

இந்த நிலையில், வேட்புனுத் தாக்கலுக்கு கடைசி நாளான இன்று ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட மேலும் ஒரு ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட  6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 6 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios