பிரபல பேட்மின்ண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

தெலங்கானாவை சேர்ந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று பெறுமை சேர்த்தார். ஏற்கனவே பேட்மிண்டனில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து இந்த சாதனைக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் புகழ்பெற்று விட்டார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி மலைச்சாமி, பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த மனுவை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் அளித்துள்ளார்.

 

அதில், ’’விளையாட்டுத் துறையில் தீராத ஆர்வம் கொண்ட நான், பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவை காதலித்து வருகிறேன். பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன். பி.வி.சிந்து எங்கிருந்தாலும் விடப்போவதில்லை. அவரை தூக்கிவந்து திருமணம் செய்து கொள்ளப்போகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த மனுவை படித்து அதிர்ச்சிடைந்துள்ளனர்.