தூக்கில் தொங்க துணிந்த 8 ஆம் வகுப்பு மாணவன்..! நண்பனை சாமர்த்தியமாக காப்பாற்றிய சிறுவன்..! அதிர வைக்கும் காரணம்!
8 வகுப்பு மாணவன் பள்ளியில் தூக்கில் தொங்க முயன்றதை பார்த்து விட்டு, உடனடியாக சாமர்தியமாக செயல்பட்டு 13 வயது சிறுவன் வடிவேல் என்பவன் தன்னுடைய நண்பனை கைப்பற்றியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
8 வகுப்பு மாணவன் பள்ளியில் தூக்கில் தொங்க முயன்றதை பார்த்து விட்டு, உடனடியாக சாமர்தியமாக செயல்பட்டு 13 வயது சிறுவன் வடிவேல் என்பவன் தன்னுடைய நண்பனை கைப்பற்றியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஒருவனின் தந்தை சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார். தந்தையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அந்த சிறுவன் சோகத்துடன் மறுநாள் பள்ளிக்கு வந்துள்ளார்.
தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறுவன், பள்ளிக்கு வந்தும் மிகவும் சோகமாகவே காணப்பட்டுள்ளார். இந்நிலையில் பள்ளி இடைவேளையின் போது, பள்ளியின் பின் புறம் அமைந்துள்ள மரத்தில் ஒரு கயிறை கொண்டு தூக்கு மாட்டி தொங்க முயன்றுள்ளார்.
இதனை, எதிர்பாராமல் அந்த பக்கம் வந்த அந்த சிறுவனின் நண்பன் வடிவேலன் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மரத்தின் மேல் ஏறி, நண்பன் கீழே தொங்கி விடாதவாறு, அவனுடைய தோள்களை பிடித்து மேலே இழுத்துக்கொண்டு, சத்தம் போட்டு அனைவரையும் வரவழைத்துள்ளார்.
உடனடியாக அந்த இடத்திற்கு வந்தவர்கள் அந்த மாணவனை பத்திரமாக மீட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு சென்று கைப்பற்றினர். நண்பன் தூக்கில் தொங்கிய போது, சாமர்த்தியமாக செயல் பட்டு சிறுவனை மீட்ட, 13 வயது மாணவன் வடிவேலை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
மேலும், சிறுவனின் இந்த செயலை ஊக்குவிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவன் வடிவேலனை தனது அலுவலகத்துக்கு குடும்பத்தோடு வர வைத்து, சிறுவனை பாராட்டி, சான்றிதழ்களும் பதக்கமும் அளித்து சிறப்பு செய்துள்ளார்.
எனினும், தன்னுடைய தந்தை இறப்பை தாங்கி கொள்ள முடியும் 8 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.