ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
ஆன்லைன் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதும், அதனை செலுத்த முடியாமல் அவர் தவித்ததும் தெரியவந்தது. இதனால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை வசந்த் உடைத்து எறிந்ததும் தெரியவந்துள்ளது.
ஆன்லைன் செயலியில் பெற்ற ரூ. 1 லட்சம் பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் இளைஞர் விரக்தியில் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வசந்த் (22). இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வசந்த் தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- அரசு பேருந்துகளில் இருந்து ஏசி அகற்றம்... டிஎன்எஸ்டிசி எடுத்த அதிரடி முடிவால் பயணிகள் அதிர்ச்சி!!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்திய போது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதும், அதனை செலுத்த முடியாமல் அவர் தவித்ததும் தெரியவந்தது. இதனால், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை வசந்த் உடைத்து எறிந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. சரிவர வீட்டுக்கு வராத கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி.. என்ன செய்தார் தெரியுமா?
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 40க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதற்கான தடை சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஆன்லைன் கடன் செயலியால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.