Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்: வாயுக் கசிவா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்துவரும் மாணவர்களில் 100 பேருக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

Nearly 100 students fall ill due to gas leak at school in hosur
Author
First Published Oct 15, 2022, 9:35 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்துவரும் மாணவர்களில் 100 பேருக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

பள்ளி அருகே இருந்த செப்டிங் டேங்கில் இருந்து வாயுக் கசிவால் மாணவர்களுக்கு இதுபோல் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 

நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இப்போ தண்டனையை அனுபவிக்கிறாங்க.. OPSஐ மறைமுகமாக விமர்சித்த? டிடிவி.தினகரன்.!

பள்ளியில் நேற்று மதிய உணவுக்குப்பின் மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது திடீரென சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. முதலில் 10 மாணவர்களுக்கு ஏற்பட்டது, அதன்பின் பல மாணவர்கள் வாந்தி, குமட்டல் உணர்வு இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, அனைத்து மாணவர்களும் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திர பாணு ரெட்டி உடனடியாக பள்ளிக்கு நேரடியாகச் சென்று  பார்வையிட்டார். அதன்பின் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும் மாணவர்களின் உடல்நிலையைக் கேட்டறிந்தார்.

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்..!

மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற மாணவர்களுக்கு எலக்ட்ரோலைட் பானங்கள் வழங்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பெற்றோர்களும், பொதுமக்களும் பள்ளி வளாகத்திற்கு முன் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. 

மேலும் சம்பவ இடத்திற்கு ஓசூர் மாநகராட்சி ஆணையர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து விஷவாயு கசிந்ததா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், போலீஸார், ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios