Asianet News TamilAsianet News Tamil

பார்வையாளர்கள், காவல்துறை இடையே தள்ளு முள்ளு; பாதியில் நிறுத்தப்பட்ட மஞ்சுவிரட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் நடபெற்ற மஞ்சு விரட்டு போட்டியின் போது காவல் துறைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு  ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

manjuvirattu is stopped for crash between audience and police
Author
First Published Jan 17, 2023, 5:52 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தில் எருது விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அதிகானூர் கிராமத்துக்கு நேற்று முன்தினம்  இருந்தே வரத்தொடங்கின.

உதயநிதி, அழகிரி சந்திப்பால் பாலாறும், தேனாறும் ஓடப்போகிறதா? செல்லூர் ராஜூ கலாய்

இந்த நிகழ்வில் குறைந்த நேரத்தில் ஓடிவரும் காளைக்கு முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் வரை பரிசு வழங்கி வருவது வாடிக்கையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம் போல எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் இன்று திடீரென்று பார்வையாளர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் கலவரம் உருவானது.

கொரோனாவுக்கு பின் மாரடைப்பை தடுக்க அமைச்சர் மா சுப்ரமணியன் சொல்லும் ஆலோசனை

இதன் காரணமாக இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு எருது விடும் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான காவல்துறையினர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், போட்டிக்காக பல்வேறு மாவட்டங்களில் வந்த வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் பரிசு பொருட்களை வெல்ல முடியாமல் நட்டத்தில் ஊர் திரும்புவதாக தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios