Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரியில் ரவுண்ட் கட்டிய கிறுக்கு பிடித்த கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயர்வு..!

கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

krishnagiri Coronavirus affected Cases increase
Author
Krishnagiri, First Published May 6, 2020, 10:37 AM IST

கிருஷ்ணகிரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த வாரம் வரை அடக்கி வாசித்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக ருத்தரதாண்டவம் அடிவருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 4058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் பசுமை மண்டலமாக இருந்து வந்தது.

krishnagiri Coronavirus affected Cases increase

இந்நிலையில், புட்டபர்த்தியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வந்த முதியவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் சேலம் சோதனை சாவடியில் தடுக்கப்பட்டு, சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். எனவே, அது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் சேர்க்கப்படவில்லை. எனவே கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ச்சியாக பசுமை மண்டலத்தின் சலுகைகளை பெறும் வாய்ப்பு உருவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அறிவித்திருந்திருந்தார்.

krishnagiri Coronavirus affected Cases increase

இந்நிலையில், சூளகிரி பகுதியை சேர்ந்த 52 வயது மற்றும் 60 வயதுள்ள இரு பெண்களுக்கு இன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்கள் பெங்களூர் சென்று திரும்பியதாகவும், அறிகுறி காட்டாத நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மும்பை சென்று திரும்பி வந்த 2 தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று உறுதியான 2 பேரில் ஒருவர் ஒசூர் மத்தகிரி, மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் என மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios