பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் முதியவருக்கு கொரோனா.. 11 பேருக்கு அறிகுறி.? அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Krishnagiri 67-year old man affected in Coronavirus

தமிழகத்தில் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இவற்றில் கிருஷ்ணகிரி கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என அரசால் நேற்று அறிவிக்கப்பட்டது.

Krishnagiri 67-year old man affected in Coronavirus

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து, அவருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முதியவர் அண்மையில் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியது தெரியவந்தது. இதனால் பச்சை மண்டலம் என அறிவிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Krishnagiri 67-year old man affected in Coronavirus

மேலும், கொரோனா பாதித்த நபருடன் வந்த மேலும் 3 பேர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
. மேலும், கொரோனா தொற்று ஏற்பட்ட நபரின் நல்லூர் கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக  அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios